October 4, 2023 3:31 am

ஒபாமா – மிச்சல் காதல் கதைஹாலிவுட் சினிமா ஆகிறதுஒபாமா – மிச்சல் காதல் கதைஹாலிவுட் சினிமா ஆகிறது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும், அவர் மனைவி மிச்சலுக்கும் இடையேயான காதல் மற்றும் திருமணத்தை அடிப்படையாக வைத்து, ஹாலிவுட்டில் படம் தயாராக உள்ளது.’சவுத்சைட் வித் யூ’ என்ற பெயரிலான அந்த படத்தில், ஒபாமாவாக நடிக்க உள்ள நடிகருக்கான வேட்டை நடக்கிறது.

இந்த தம்பதிக்கு இடையே, 1989ல், சிகாகோவின் சவுத் சைட் என்ற இடத்தில் நடைபெற்ற முதல் சந்திப்பு, அதைத் தொடர்ந்து, மூன்றாண்டுகளாக அவர்கள் இடையே நடைபெற்ற காதல் சம்பவங்களின் அடிப்படையில், இந்தப் படம் தயாரிக்கப்பட உள்ளது.

அடுத்த மாதம் ஜூலையில், இதற்கான படப்பிடிப்புகள் துவங்க உள்ளன. மிச்சலாக, டிகா சம்ப்டர் என்ற இளம் நடிகை நடிக்கிறார். ஒபாமா சாயலில் உள்ள நடிகரை தேடிக் கொண்டிருக்கிறார், படத்தின் இயக்குனர் ரிச்சர்ட் டேனி. படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு ஜூலையில் துவங்குகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்