June 8, 2023 7:19 am

சர்வதேச அளவில் அபாயகரமான நாடுகள் பட்டியல் ஈராக் முதலிடத்தில்சர்வதேச அளவில் அபாயகரமான நாடுகள் பட்டியல் ஈராக் முதலிடத்தில்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அமெரிக்காவின் வாஷிங்டனை சேர்ந்த ‘இன்டல் சென்டர்’ என்ற நிறுவனம் சர்வதேச அளவில் மிக அச்சுறுத்தலான (அபாயகரமான) நாடுகள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.

அதில் ஈராக் முதலிடத்தில் உள்ளது. இங்கு வன்முறை சம்பவங்கள், தீவிரவாத அச்சறுத்தல் மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் 8–வது இடத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இவைதவிர முதல் 10 நாடுகள் பட்டியலில் நைஜீரியா 2–வது இடத்திலும், சோமாலியா 3–வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 4–வது இடத்திலும், ஏமன் 5–வது இடத்திலும் உள்ளன.

சிரியா 6–வது இடத்திலும், லிபியா 7–வது இடத்திலும், எகிப்து 9–வது இடத்திலும், கென்யா 10–வது இடத்திலும் உள்ளன. இந்த நாடுகளில் கடந்த 30 நாட்களாக நடந்த தீவிரவாத சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்