June 8, 2023 5:45 am

அமெரிக்கா, நியூஜெர்சி மாகாணத்தில் பள்ளிகளுக்கு பொங்கல், விடுமுறை அமெரிக்கா, நியூஜெர்சி மாகாணத்தில் பள்ளிகளுக்கு பொங்கல், விடுமுறை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அமெரிக்கா, நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு பொங்கல், விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிரென்டன் நகரில் நடைபெற்ற நியூஜெர்சி மாகாண கல்வி வாரிய மாதாந்திர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோவர்த்தன் பூஜை, ரக்ஷா பந்தன், கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கணேச சதுர்த்தி, நவராத்திரி ( 9 நாட்கள்), தசரா, தீபாவளி, மகர சங்கராந்தி, வசந்த பஞ்சமி, மகா சிவராத்திரி, ஹோலி, யுகாதி, ராம நவமி, ஹனுமன் ஜெயந்தி, ஆகிய நாட்கள் மத ரீதியிலான விடுமுறை நாட்கள் பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பள்ளிகளுக்கு வராத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.

நியூஜெர்சி மாகாண மாவட்ட கல்வி வாரியத்தின் இந்த முடிவுக்காக வாரியத் தலைவர் மார்க் டபிள்யூ. பீட்ரனுக்கு பிரபஞ்ச ஹிந்து அமைப்பின் தலைவர் ராஜன் ஜெட் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் குரு பூர்ணிமா, நாக பஞ்மி, மற்றும் ஓணம் பண்டிகைகளுக்கும் அடுத்த கல்வி ஆண்டு முதல் விடுமுறை அறிவிக்க கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்