September 22, 2023 3:59 am

வடக்கு கிழக்கு மக்களுக்கு நிதியம் ஒன்றை உருவாக்கப் போவதாக வடமாகாணசபை உறுப்பினர் ஜிரி லிங்கனாதன் தெரிவிப்புவடக்கு கிழக்கு மக்களுக்கு நிதியம் ஒன்றை உருவாக்கப் போவதாக வடமாகாணசபை உறுப்பினர் ஜிரி லிங்கனாதன் தெரிவிப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வவுனியா திருநாவற்குளம் சிறுவர் ஆரம்பப்பாடசாலையின் ஒளிவிழா நிகழ்வு இன்று காலை 12-12-2014 கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் பாலேந்திரன் தலமையில் இடம்பெற்றது. இன்நிகழ்வில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் எங்களது கட்சியில் 25000 உறுப்பினர்கள் அந்தக்காலத்தில் இருந்தனர் அதிலே கணிசமான அளவு இன்று வெளிநாடுகளில் இருக்கிறார்கள். நாங்கள் அவர்களை எல்லாம் ஒன்றுதிரட்டி மிகவிரைவிலே நாங்கள் அரசியல் தேவைகளுக்கு அப்பால் நிதியம் ஒன்றை உருவாக்கி அந்த நிதியத்தின் ஊடாக இந்த மாவட்டத்திற்கு மாத்திரமல்ல வடக்கு கிழக்கில் இருக்கின்ற இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்கான ஒரு முயற்சியை எடுத்துக்கொண்டிருக்கின்றோம். எனவே நாங்கள் தொடர்ந்தும் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவையை செய்வோம் எனத்தெரிவித்ததுடன் வவுனியா திருநாவற்குளம் சிறுவர் ஆரம்பப் பாடசாலைக்கு இரண்டு இலட்சம் ரூபா நிதியுதவி மற்றும் மைதானம்,சிறுவர் விழையாட்டுப் பூங்கா அமைத்து தருவதாகவும் உறுதியளித்தார்.

இந்நிழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

இன்நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்நாள் உப நகரபிதா கே.சந்திரகுலசிங்கம,; திருநாவற்குளம் கிராமசேவையாளர் எஸ்.கோணேஸ்வரலிங்கம் ,வெண்கலச்செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினர் சு.ஜெகதீஸ்வரன் (சிவம்) மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கெண்டனர்.

PICT0330

PICT0341

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்