Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வளையல் நெக்லஸ் அணிந்துள்ள 18 மாத குழந்தை மம்மி வளையல் நெக்லஸ் அணிந்துள்ள 18 மாத குழந்தை மம்மி

வளையல் நெக்லஸ் அணிந்துள்ள 18 மாத குழந்தை மம்மி வளையல் நெக்லஸ் அணிந்துள்ள 18 மாத குழந்தை மம்மி

1 minutes read

எகிப்தின் மத்தியில் உள்ள ‘பாயும்’ நகரில் 300 ஏக்கர் மயானத்தில் 10 லட்சம் மம்மிக்கள் உள்ளதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் உடாஹ் நகரில் உள்ள ப்ரிகாம் யங் பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வு குழு பாக்-இல்-கேமஸ் என்ற மயானத்தை கடந்த 30 வருடங்களுக்கு முன் கண்டுபிடித்தது. கடந்த முப்பது வருடங்களாக அக்குழுவினர் அங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த 300 ஏக்கர் மயானத்திலிருந்து இதுவரை 1700 மம்மிக்களை அவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

75 அடி ஆழம் வரை பூமிக்குள் பள்ளம் தோண்டி இந்த மம்மிக்கள் புதைக்கப்பட்டுள்ளன. ரோமாபுரி அரசர்களின் கட்டுப்பாட்டில் எகிப்து இருந்தபோது இவர்கள் அனைவரும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வெகு சமீபத்தில் 18 மாத குழந்தை மம்மியை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். அப்பெண் குழந்தையின் இரு கைகளில் அணிந்துள்ள வளையல் மற்றும் கழுத்தில் அணிந்துள்ள நெக்லஸ் இன்றும் அப்படியே உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More