ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் வர்த்தக கைத்தொழில் அமைச்சராக இருக்கும் ரிசாட் பதியுர்தீன் தேர்தல் மேடைகளை புறக்கணித்து வருவது தொடர்பில் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி அபிவிருத்தி குழுக்களின் தலைவருமாக இதுவரை செயற்பட்டு வரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் மற்றும் அவர் தலைமையிலான இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தாம் அங்கம் வகிக்கும் அரசாங்கத்தின் தேர்தல் மேடைகளை புறக்கணித:து வருகின்றனர்.
இக் கட்சியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த உனைஸ்பாரூக் பொது வேட்பாளரை ஆதரிக்க முற்பட்டதை அடுத்து அவருக்கு வன்னிக்கான தேர்தல் பிரசார பணி எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வரின் இராஜினாமாவை அடுத்து அவ் இடத்திற்கு இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்பினர் அமீர் அலியை ரிசாட் பதியுர்தீன் நியமித்திரு;தார்.
இந் நிலையில் அரசாங்கத்தை விட்டு அமைச்சர் ரிசாட் பதியுர்தின் வெளியேறுவாரா இல்லையா என்ற சந்தேகங்கள் பூதாகாரமாக வெளிக்கிளம்பியுள்ள நிலையில் வவுனியாவில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அலுவலக திறப்பு விழா மற்றுமு; முல்லைத்தீவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொண்ட பிரசார கூட்டம் என்பவற்றை புறக்கணித்திந்தார்.
இந் நிலையில் வவுனியா முதலியார்குளம் பகுதியில் உனைஸ் பாரூக் எம்.பி. போது வேட்பாளருக்கு ஆதரவாக ஏற்பாடு செய்தீருந்த கூட்டத்தில் மக்களை கலந்துகொள்ள வேண்டாம் எனவும் அவ்வாறு கலந்துகொண்டால் தற்போது ரிசாட் அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள தையல் பயிற்சி நிலையத்தை மூடிவிடுவார் எனவும் மக்கள் கருத்து தெரிவத்ததாக பொது வெட்பாளரை ஆதரிக்கும் முன்னாள் ஜக்கிய மக்கள் சுத்திர கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இதவேளை தற்போது உனைஸ் பாரூக் எம்.பி பொது வேட்பாளரை ஆதரிக்க தொடங்கியதும் அரசாங்கத்தினால் அவருக்காக ஒதுக்கப்பட்ட நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் ரிசாட் அமைச்சரும் கட்சி தாவினால் அவருக்கு ஒதுக்கப்பட்ட நிதி நிறுத்தப்பட்டு விடும் என்ற காரணத்தால் அந் நிதி முழுமையாக செலவிடப்பட்டதன் பின்னர் அவர் கட்சி தாவுவார் எனவும் அவ் முக்கியஸ்தர் தெரிவித்துருந்தார்.
எவ்வாறாயினும் வன்னி பிரதேசத்தில் இடம்பெற்று வரும் முக்கிய கூட்டங்களை அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் உட்பட அவர் சார்ந்த வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் புறக்கணித்து வருகின்றமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.