June 2, 2023 1:26 pm

துனிசியா அதிபர் தேர்தல்: 88 வயது எசெப்சி வெற்றிதுனிசியா அதிபர் தேர்தல்: 88 வயது எசெப்சி வெற்றி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கடந்த 2011–ம் ஆண்டு மக்கள் புரட்சி ஏற்பட்டது. அதை தொடர்ந்து 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த சர்வாதிகாரி ஷின் எல் அபிடின் பென்அலி பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.

அதை தொடர்ந்து அங்கு ஜனநாயக முறையில் முதன் முறையாக சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் கடந்து அரசின் தற்காலிக அதிபர் மன்செப் மார்சோகியும், 88 வயது மூத்த அரசியல்வாதி பெஜி காய்டு எசெப்சியும் போட்டியிட்டனர்.

இந்த நிலையில் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் எசெப்சி 55.6 சதவீதம் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட மன்செப் மார்கோகி 44.32 சதவீதம் ஓட்டுகளே பெற்று தோல்வி அடைந்தார். தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எசெப்சி பதவி இழந்த அதிபர் பென் அலி அரசியல் பாராளுமன்ற சபாநாயகராகவும், வெளியுறவு மற்றும் உள்துறை மந்திரி ஆகவும் பதவி வகித்தவர்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்