வவுனியா தோணிக்கல்லைச் சேர்ந்த அல்பட் டிசாந்த (வயது 16) என்ற சிறுவனே புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டான். இச்சம்பவம் 23-12-2014 நேற்றிரவு 10.00 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது வீட்டிற்கு தாமதமாக வந்த மகனை தந்தையார் கண்டித்ததாகவும் இதன்காரணமாக கோபமுற்ற மகள் நான் தற்கொலைசெய்வேன் எனக்கூறிச்சென்றதாகவும் மகனைக் காணவில்லை என பெற்றோர் இருவரும் தேடியபொழுது புகையிரதப்பாதையில் சடலமாக கண்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணையை வவுனியாப் பொலிசார் மேற்கொண்டுள்ளார்கள்