ஃபேஸ்புக் பயனாளியாக கவனத்தை ஈர்த்த அன்னா ஸ்டோஹர் என்ற பாட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். 114 வயதாகிய இவர், அமெரிக்காவின் மின்னேசோட்டா பகுதியில் வசித்து வந்தார். தூக்கத்திலேயே உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னா ஸ்டோஹர் 1900 ம் ஆண்டு பிறந்தவர். கடந்த அக்டோபர் மாதம் ஃபேஸ்புக்கில் இணைய விரும்பினார்.
ஆனால் ஃபேஸ்புக் விதிகளின் படி 1905 ம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் மட்டுமே அதில் உறுப்பினராக சேர முடியும். இதனால் பாட்டி தனது வயதை குறைத்து சொல்லி ஃபேஸ்புக்கில் சேர்ந்தார். இந்த செய்தி வெளியாகி இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு முன்னதாக ஃபேஸ்புக்கின் வயது கொள்கை தொடர்பாக அவரது மகன் இமெயில் மூலம் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லாமல் போனது.
இவர் 113 வயதில் ஃபேஸ்புக்கில் இணைந்த செய்தி, உலகம் முழுவதும் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு பாட்டி 114 வது பிறந்த நாளை கொண்டாடிய போது ஃபேஸ்புக் சார்பில் 114 மலர்களுடன் வாழ்த்து அனுப்பி வைக்கப்பட்டது. புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள வயது கட்டுப்பாடு இல்லை என நிரூபித்தவர் இந்த ஃபேஸ்புக் பாட்டி