Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாப் பாடகி மடோனாவின் அடுத்த ஆல்பத்திற்கு உரிய 14 பாடல்கள் ஆன்லைனில் கசிந்தனபாப் பாடகி மடோனாவின் அடுத்த ஆல்பத்திற்கு உரிய 14 பாடல்கள் ஆன்லைனில் கசிந்தன

பாப் பாடகி மடோனாவின் அடுத்த ஆல்பத்திற்கு உரிய 14 பாடல்கள் ஆன்லைனில் கசிந்தனபாப் பாடகி மடோனாவின் அடுத்த ஆல்பத்திற்கு உரிய 14 பாடல்கள் ஆன்லைனில் கசிந்தன

1 minutes read

உலகின் மிக பணக்கார பாப் பாடகர்கள் வரிசையில்  இந்த ஆண்டு முதல் இடத்தை பிடித்து இருப்பவர் பாப் பாடகி மடோனா. சமீப காலங்களில் மடோனாவின் பாடல்கள் எதுவும் வெளியாகாத போதும், இவர் 80 கோடி  மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

56 வயதான மடோனா கடந்த முப்பது ஆண்டுகளாக இசைத்துறையில் இருந்து வருகிறார் இவர் இதுவரை 30 கோடி இசைப்பதிப்புகளை உலக அளவில் வெளியிட்டு விற்றுள்ளார்.

மேலும் பல லாபகரமான ஒப்பந்தங்களையும் செய்து உள்ளார். இதில் ஒன்று தான 2007ம் ஆண்டில் லைவ் நேஷனுடனான 12 கோடி அமெரிக்க டாலர்  ஒப்பந்தம். இதற்காகவே இவர் அடிக்கடி பாப் உலகின் இளவரசி என்று அழைக்கப்படுவது உண்டு

பாப் இசை மட்டுமல்லாது ஜேம்ஸ் பாண்ட் படமான “டை அனதர் டே” உள்ளிட்ட 20ற்க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மடோனா.

மடோனாவின்  தனது அடுத்த ரிபெல் ஹார்ட் ஆல்பத்திற்காக 14 பாடல்களை தயாரித்து தயாரித்து வைத்து இருந்தார். இந்த பாடல்கள் முன் எப்போதும் கேட்டு இராத  பாடல்கள். இந்த பாடல்கள் அனைத்தும்  ஆன் லைன் மூலம்  ரகசியமாக வெளிவந்து உள்ளன.இந்த பாடல்கள்  டிசமபர் இரவு 23 ந்தேதி  கசிந்து உள்ளது. இதனால் அதிருப்தியான மடோனா  இது குறித்து தனது  அதிருப்தியை இன்ஸ்டாகிராம் மூலம் வெளிபடுத்தி உள்ளார்.

வேனி விடி விசி(Veni Vidi Vici) அழகான வடுக்கள்(Beautiful Scars) சுதந்திரம் (Freedom) கடவுள் நேசிக்கிறார்(God is Love) இறுக்கமான பிடி (Hold Tight) சிறந்த இரவு (Best Night)  உளபட 14 பாடல்கள் வெளியாகி உள்ளது.இந்த பாடல்கள் அனைத்தும் பரேல் வில்லியம்முடன் சேர்ந்து தயாரிக்கபட்டது ஆகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More