Sunday, May 5, 2024

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அதிபர் தேர்தல் | இலங்கை தமிழர் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அலைஅதிபர் தேர்தல் | இலங்கை தமிழர் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அலை

அதிபர் தேர்தல் | இலங்கை தமிழர் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அலைஅதிபர் தேர்தல் | இலங்கை தமிழர் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அலை

1 minutes read

இலங்கையில் நாளை மறுதினம் (8–ந்தேதி) அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் அதிபர் ராஜபக்சே 3–வது தடவையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபாலா சீறிசேனா நிற்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

எனவே அவர்கள் 2 பேரும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்தனர். இந்த நிலையில் நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது. தற்போது ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த தேர்தலில் அதிபர் ராஜபக்சேவின் செல்வாக்கு குறைந்துள்ளது. கடந்த 2011–ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரில் வெற்றி பெற்றிருந்தார். அதனால் இலங்கையின் தெற்கு பகுதியில் வாழும் சிங்களர்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. அதனால் மிக சுலபமாக வெற்றி பெற்று விட்டார்.

ஆனால் இந்த தடவை அவரது செல்வாக்கு சிங்களர்களிடையே குறைந்து விட்டது. மேலும் பொது வேட்பாளராக மைத்ரிபாலா சீறிசேனா என்ற சிங்களரே போட்டியிடுகிறார். அதனால் இந்த தடவை சிங்களர்களின் ஓட்டு 2 ஆக பிரியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வடக்கு பகுதியில் மெஜாரிட்டியாக வாழும் தமிழர்களிடையேயும் ராஜபக்சேவுக்கு அதிக அளவு ஆதரவு இல்லை. இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது தமிழர்களை ராஜபக்சேவின் சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. அது ஒருபுறம் இருக்க இறுதி கட்ட போர் முடிந்த பிறகு தமிழர் பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறவில்லை. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ரோடுகள், குடிநீர் வசதி, மின்சாரம், ரெயில் போக்குவரத்து போன்றவை செய்து தந்துள்ளதாக ராஜபக்சே தெரிவிக்கிறார்.

ஆனால் அதை தமிழர்கள் முழுமையாக ஏற்கவோ, நம்பவோ தயாராக இல்லை. போர் முடிந்த பிறகும் தமிழர்கள் பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு முகாமிட்டுள்ளது. மேலும் தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More