Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பேட்டரியை விழுங்கி அவஸ்தைப்பட்ட 5 வயது சிறுவன் 65 அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு பேசத்தொடங்கினான்பேட்டரியை விழுங்கி அவஸ்தைப்பட்ட 5 வயது சிறுவன் 65 அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு பேசத்தொடங்கினான்

பேட்டரியை விழுங்கி அவஸ்தைப்பட்ட 5 வயது சிறுவன் 65 அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு பேசத்தொடங்கினான்பேட்டரியை விழுங்கி அவஸ்தைப்பட்ட 5 வயது சிறுவன் 65 அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு பேசத்தொடங்கினான்

1 minutes read

ஒரு மனிதன் ஆயுள் முழுவதும் அனுபவிக்கும் வேதனையை, கடந்த நான்கு வருடங்களுக்குள்ளாகவே அனுபவித்து விட்டான் அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் எம்மெட் ராச். அரிசோனா மாநிலத்தில் உள்ள பியோரியா நகரத்தில் வசித்து வரும் எம்மெட் தவழும் குழந்தையாக இருக்கும் போது டிவிடி ரிமோட் பேட்டரியை விழுங்கியதிலிருந்து தொடங்கியது அவனது சோதனைக்காலம்.

உள்ளே சென்ற பேட்டரி உணவுக்குழாயில் சிக்கிக்கொண்டது. இதனால் மூச்சு விட சிரமம் ஏற்பட்டதால் தொண்டையில் சிறு துளையிட்டு குழாய் மூலம் செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டது. மேலும் பேட்டரியில் உள்ள ஆசிட் கசிந்ததால் எம்மெட்டுக்கு உணவுக்குழாயில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டது.

இரண்டு வயதிற்குள்ளே 200 முறை எக்ஸ்ரே சோதனைக்கு உட்படுத்தப்பட்ட எம்மெட்டுக்கு இதுவரை 65 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆசிட்டால் எரிந்து போன நான்கு அங்குலம் நீளமுள்ள உணவுக்குழாய் நீக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த எம்மெட், நான்கு வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் இயற்கையாக மூச்சுவிடவும், பேசவும் தொடங்கியிருக்கிறான். குணமான பின் ஆசையாக பீட்சா சாப்பிடுகிறான். தங்கள் அலட்சியத்தால் மகனுக்கு நேர்ந்த நிலைமையை நினைத்து வருந்திய அவனது பெற்றோர் இப்போது தங்கள் குற்ற உணர்விலிருந்து மீண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

அமெரிக்காவின் ஒவ்வொரு ஆண்டும் 3,500க்கும் அதிகமானவர்கள் மினியேச்சர் டிஸ்க் அல்லது பட்டன் பேட்டரிகளை விழுங்குவதாக தேசிய தலைமை விஷமருந்து மையம் சமீபத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More