May 31, 2023 4:46 pm

ஒபாமாவுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கைகளை இந்தியா நிராகரித்ததுஒபாமாவுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கைகளை இந்தியா நிராகரித்தது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

குடியரசு தின அணிவகுப்பில், ஒபாமாவுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கைகளை இந்தியா நிராகரித்தது.

குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமெரிக்க ரகசிய போலீஸ் உயர் அதிகாரிகள், டெல்லியில், இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

அப்போது, இந்திய அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை அளித்தனர். அதில், குடியரசு தின அணிவகுப்பு நடக்கும் ராஜபாதையை எதிர்நோக்கி உள்ள கட்டிடங்களின் உச்சியில், துப்பாக்கியால் குறிபார்த்து சுடுவதில் வல்லமை மிக்க அமெரிக்க வீரர்களைத்தான் நிறுத்த வேண்டும் என்பதும் ஒன்றாகும்.

ஆனால் அந்த கோரிக்கையை இந்திய அதிகாரிகள் நாகரிகமாக நிராகரித்து விட்டனர். ‘இந்திய அதிகாரிகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள். மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் திறன் பெற்றவர்கள். எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகளில் தலையிடாதீர்கள்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் அணிவகுப்பை பார்வையிடுவார்கள். எனவே, அமெரிக்க வீரர்களை நிறுத்துவது தேவையற்றது’ என்று இந்திய அதிகாரிகள் திட்டவட்டமாக கூறி விட்டனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்