June 8, 2023 6:37 am

மலேசியப் போலிஸ் அதிகாரி ஆஸ்திரேலிய பிரிஸ்பேனில் கைது மலேசியப் போலிஸ் அதிகாரி ஆஸ்திரேலிய பிரிஸ்பேனில் கைது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மலேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பின் , நாட்டிலிருந்து தப்பியோடிய மலேசியப் போலிஸ் அதிகாரி ஒருவர் ஆஸ்திரேலியப் போலிசாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறுகின்றன.

இந்தப் போலிஸ் அதிகாரி மங்கோலியப் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

மலேசியப் பிரதமர் நஜிப் ரஜாக்கின் மிக நெருங்கிய சகா ஒருவருடன் பாலியல் தொடர்பு வைத்திருந்த அந்தப் பெண்ணின் உடல் ராணுவத்தினர் பயன்படுத்தும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி சிதறடிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், சிருல் அஸார் உமார் என்ற இந்த மலேசியப் போலிஸ் அதிகாரிக்கும் மற்றும் ஒரு சக அதிகாரிக்கும் முன்பு நீதிமன்றத்தில் விடுதலை அளிக்கப்பட்ட பின்னர், கடந்த வாரம், வேறொரு நீதிமன்றம் அவர்களுக்கு அதற்கு முன்பு அளிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை உறுதி செய்திருந்தது.

இந்தப் போலிஸ் அதிகாரி பிரிஸ்பேனில் சட்டவிரோதமாக நுழைந்ததாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் ஆஸ்திரேலியா மரண தண்டனையை அவர்களது நாடுகளில் எதிர்நோக்கும் சந்தேக நபர்களை நாடுகடத்தி அவர்கள் நாட்டுக்கு ஒப்புவிப்பதில்லை.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்