June 8, 2023 6:27 am

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதாக கூறி பாகிஸ்தானை பகிரங்கமாக கண்டிப்பு | அதிபர் ஒபாமா தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதாக கூறி பாகிஸ்தானை பகிரங்கமாக கண்டிப்பு | அதிபர் ஒபாமா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர், மனைவி மிச்செல்லுடன் ‘ஏர்போர்ஸ்-1’ விமானம் மூலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லி வந்து சேருகிறார்.

இதையொட்டி ஒபாமா பிரபல ஆங்கில பத்திரிகைக்கு சிறப்பு பேட்டி அளித்து உள்ளார். அதில், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதாக கூறி பாகிஸ்தானை பகிரங்கமாக கண்டித்து இருக்கிறார். அவர் கூறி இருப்பதாவது:-

தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றி வருகிறது. இருந்தபோதிலும், பாகிஸ்தான், தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழ அனுமதிக்க முடியாது என்பதை நான் அந்த நாட்டுக்கு தெளிவுபடுத்தி விட்டேன். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது.

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் சிலரும் பலி ஆனார்கள். பின்னர் மும்பையில் 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் சிலரும் உயிர் இழந்தனர். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை குற்றவாளி கூண்டில் ஏற்றி, பாகிஸ்தான் தண்டிக்க வேண்டும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்