பிரிட்டனில் சிரியா தொடர்பான பயங்கரவாதக் குற்றச் சாட்டுகளில் கைதாவோர் எண்ணிக்கை ஆறு மடங்காக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கூறியதாவது:
சிரியாவில் பயங்கரவாதப் பயிற்சி முகாம்களில் பங்கேற்றது, பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி அளித்தது, பயங்கரவாதச் செயல்களுக்காகத் திட்டமிட்டது போன்ற
குற்றங்களுக்காக பிரிட்டன் முழுவதும் 165 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2013-ஆம் ஆண்டு சிரியா தொடர்பான பயங்கரவாதக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 25
பேருடன் ஒப்பிடுகையில், இது 6 மடங்கு அதிகம் என்று தெரிவித்தனர்.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஹெலன் பால் கூறுகையில், “”இதுவரை இல்லாத மிகப் பெரிய எண்ணிக்கையில் பயங்கரவாதம் தொடர்பான
புலன்விசாரணைகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.