Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 2015–ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ்2015–ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ்

2015–ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ்2015–ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ்

1 minutes read

2015–ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் (பிரபஞ்ச அழகி) போட்டி அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் நடந்தது. அதில் இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, உக்ரைன் உள்ளிட்ட 88 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.

உடை அலங்காரம், அறிவுத்திறன், உடல் அழகு உள்ளிட்ட பல்வேறு பிரிவு களில் போட்டி நடந்தது. நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது.

அதில் கொலம்பியாவை சேர்ந்த பவுலினா வேகா மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார். அவருக்கு கடந்த ஆண்டு பட்டம் வென்ற வெனிசுலா அழகி காபிரியலா இஸ்லர் கிரீடம் அணிவித்தார்.

அவருக்கு அடுத்த படியாக அமெரிக்காவை சேர்ந்த நியா சான்செஸ், உக்ரைனை சேர்ந்த டயானா ஹர்குஷா ஆகியோர் 2–வது இடங்களை பிடித்தனர்.

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற கொலம்பியா அழகி பவுலினா வேகாவுக்கு 22 வயது ஆகிறது. இவர் கொலம்பியாவில் பாரன் குயிலா நகரை சேர்ந்தவர்.

கல்லூரி மாணவி ஆன இவர் வர்த்தக நிர்வாகம் படித்து வருகிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More