வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் 5000க்கும் மேலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அங்கு சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில் பனிப் பொழிவு ஏற்படக் கூடும் என்று அமெரிக்காவின் தேசிய வானிலை சேவைகள் மையம் அறிவித்துள்ளதை அடுத்தே இந்த அளவுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அப்பகுதிகளில் வீசும் என்று எதிர்பார்க்கப்படும் குளிர்காலப் புயல் காரணமாக 90 செ.மீ அளவுக்கு பனிப் பொழிவு ஏற்படக் கூடும் என்று வானியல் வல்லுநர்கள் அறிவித்துள்ளனர்.