வவுனியா உக்குளாங்குளத்தில் குடும்பத்தகராறு காரணமாக பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்டவர் கஜேந்திரன் சுதாசினி வயது 28 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது
கஜேந்திரன் கடந்த மாதம் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளார். வந்ததிலிருந்து கணவன் மனைவிக்கிடையில் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சுதாசினி 27-01-2015 மாலை 4.00 மணியளவில் உடலில் மண்ணண்னை ஊற்றி தீ வைத்தக்கொண்டார்.மனைவியின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்றச்சென்ற கணவன் பாலச்சந்திரன் கஜேந்திரன் வயது 38 படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.