May 31, 2023 5:41 pm

இலங்கைத் தமிழ் அகதிகளைக் கைது செய்தது சரியானதுதான் | ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்புஇலங்கைத் தமிழ் அகதிகளைக் கைது செய்தது சரியானதுதான் | ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கைத் தமிழ் அகதிகள் 157 பேரை, ஆஸ்திரேலிய கடற்படை அதிகாரிகள் கைது செய்தது சட்டப்படி சரியானதுதான் என்று ஆஸ்திரேலிய நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

ஐம்பது குழந்தைகள் உள்ளிட்ட 157 இலங்கைத் தமிழ் அகதிகள், கடந்த ஆண்டு, கடல் வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்றனர். அப்போது ஆஸ்திரேலிய கடல் எல்லையில் அவர்களை கைது செய்த அந்த நாட்டின் கடற்படை அதிகாரிகள், அகதிகள் 157 பேரையும், நாரு தீவில் உள்ள தடுப்பு முகாமில் தங்க வைத்துள்ளனர். இந்த நிலையில், அவர்களை திரும்பத் அனுப்புவது தொடர்பாக ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில், ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் புதன்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கைத் தமிழ் அகதிகள் 157 பேர் கைது செய்யப்பட்டது, ஆஸ்திரேலிய குடியமர்வு அதிகாரங்கள் சட்டப்படி சரியான நடவடிக்கைதான். இந்த நடவடிக்கையை மேற்கொள்ள ஆஸ்திரேலியக் கடற்படை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. இந்த விவகாரத்தில் குடியமர்வு அமைச்சகம் மேற்கொண்டு முடிவெடுக்கும் வரை, அவர்கள் தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய குடியமர்வுத் துறை அமைச்சர் பீட்டர் டட்டன் கூறுகையில், “இந்த உத்தரவை வரவேற்கிறேன். இலங்கைத் தமிழ் அகதிகள் விவகாரத்தில், ஆஸ்திரேலிய அரசு எடுத்த நடவடிக்கை சரியானதுதான் என்பதை இந்த உத்தரவு நிரூபித்துள்ளது என்று பீட்டர் டட்டன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ் அகதிகள் தரப்பு வழக்குரைஞர் கூறுகையில், “இந்தத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், இந்த தீர்ப்பின் மூலம், 157 இலங்கை அகதிகளை ஆஸ்திரேலிய அரசு கைது செய்த ரகசியம், வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது’ என்று தெரிவித்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்