Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கல்வியில்; தரப்படுத்தலே தமிழ் இளைஞ்ஞர்கள் ஆயுதம் ஏந்தக்காரணம்- சி.வி.விக்கினேஸ்வரன்கல்வியில்; தரப்படுத்தலே தமிழ் இளைஞ்ஞர்கள் ஆயுதம் ஏந்தக்காரணம்- சி.வி.விக்கினேஸ்வரன்

கல்வியில்; தரப்படுத்தலே தமிழ் இளைஞ்ஞர்கள் ஆயுதம் ஏந்தக்காரணம்- சி.வி.விக்கினேஸ்வரன்கல்வியில்; தரப்படுத்தலே தமிழ் இளைஞ்ஞர்கள் ஆயுதம் ஏந்தக்காரணம்- சி.வி.விக்கினேஸ்வரன்

2 minutes read

கல்வியில் தரப்படுத்தல் அறிமுகம் செய்யப்பட்டபின் பல மாற்றங்களுக்கு எமது மாணவ சமுதாயம் முகம்கொடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு உள்ளானார்கள் இதனால் இளைஞ்ஞர்கள் ஆயும் ஏந்தவேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

வவுனியா கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தின் இன்று 29-01-2015 வருடாந்த இல்லமெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்திராக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே மேற்படி தெரிவித்தார்.

என்னுடைய மாணவச் செல்வங்களே எங்கள் பாரம்பரியம் மிகத்தொன்மையானது நான் அறிய ஒரு காலத்தில் சிறப்பாக இருந்தது.எமது பள்ளிப்பருவத்தின்போது எம்மை ஆண்டவர்கள் ஆங்கிலேயர்கள் அவர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது 1948 ஆம் ஆண்டு வருகின்ற பெப்ரவரி 4 ஆம் திகதியுடன் சுதந்திரம் பெற்று 67 வருடங்கள் ஆகின்றது. சுதந்திரம் பெற்ற காலத்தில் நாங்கள் படித்த பாடங்கள் எல்லாம் ஆங்கில மொழியிலேயே பயிற்றுவிக்கப்பட்டது.ஆங்கில மொழியில் பயின்று அந்தக் காலத்தில் சிங்கள, பறங்கிய, மலாய ஏன் சீன மாணவர்களுடன் கூட போட்டி போட்டுகொண்டு முன்னேறினோம்.எம்மில் வேற்றுமை வளராமல் ஆங்கில மொழி எம்மை இணைத்திருந்தது பொதுவாக கல்வியிலும்,விளையாட்டிலும் தமிழ்பேசும் மக்களாகிய நாங்கள் மிகவும் சிறந்து விளங்கினோம்.

பல்கலைக்கழகத்தினுள் 1948 ஆம் ஆண்டு தொடக்கம் 1956 ஆம் ஆண்டு வரையில் உள்னுழைந்த மாணவ, மாணவியரின் பெயரைப் பார்த்தீர்களானால் அங்கு முதன்மையாக இருந்தவர்கள் தமிழ் பேசும் மக்கள் ஊக்கமும், விடாமுயற்சியும், விவேகமும் எம் அன்றைய மாணவச்செல்வங்களின் தலை சிறந்த பண்புகளாக இருந்தது. ஆசிய விழையாட்டுக்களிலும், ஒலிம்பிக் போட்டிகளிலும்; பங்குபற்றவும் எம் தமிழ் பேசும் மக்களே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அப்போதெல்லாம் எம் தமிழ் பேசும் மக்களே இந்த நாடு பூராவும் பரந்த வாழ்ந்து வந்தார்கள்.ஆங்கிலேயரும் பாகுபாடு காட்டாது எங்கள் தகமைகளுக்கு முதலிடம் கொடுத்து எம்மை ஊக்குவித்து வந்தார்கள். 1956 ஆம் ஆண்டில் சிங்களம் மட்டும் சட்டம் வந்தபின் 1970 வதுகளில் கல்வியில் தரப்படுத்தல் அறிமுகம் செய்யப்பட்டபின் பல மாற்றங்களுக்கு எமது மாணவ சமுதாயம் முகம்கொடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு உள்ளானார்கள் இதனால் இளைஞ்ஞர்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

இன்று ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் ஆட்சியில் மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில் உங்களுக்கென்று வடமாகாண அரசு அலகு அமைக்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் யாவரும் எமது பாரம்பரிய பெருமைகளையும்,பல்தரப்பட்ட சிறப்பு அம்சங்களையும்,உலகிற்கு பறைசாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளது. தகுதியிலும். விழையாட்டுக்களிலும் சிறந்து விளங்கும் அதேநேரத்தில் நல்ஒழுக்கத்திலும் நீங்கள் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.

இவருடன் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,வினோதரராலிங்கம்,வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராசா, ஜி.ரி.லிங்கநாதன்,இ.இந்திரராஜா,தர்மபால செனவிரட்ன ஆகியோரும் வருகை தந்தனர்.

PICT0220

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More