Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஹீலியம் பலூனில் பறந்து புதிய உலக சாதனை | 11 ஆயிரம் கி.மீட்டர் : 160 மணி நேரம்ஹீலியம் பலூனில் பறந்து புதிய உலக சாதனை | 11 ஆயிரம் கி.மீட்டர் : 160 மணி நேரம்

ஹீலியம் பலூனில் பறந்து புதிய உலக சாதனை | 11 ஆயிரம் கி.மீட்டர் : 160 மணி நேரம்ஹீலியம் பலூனில் பறந்து புதிய உலக சாதனை | 11 ஆயிரம் கி.மீட்டர் : 160 மணி நேரம்

1 minutes read

புதிய உலக சாதனை படைப்பதற்காக ஹீலியம் கியாஸ் பலூன் மூலம் ஜப்பானில் இருந்து தங்களது சாதனைப் பயணத்தை துவக்கிய இரு விமானிகள் மெக்சிகோவில் இன்று பத்திரமாக தரையிறங்கினர்.

7 அடி நீளம், 5 அடி அகலம் மற்றும் 5 அடி உயரம் கொண்ட சிறிய கூடாரத்துடன் கூடிய ஹீலியம் பலூனில் பறந்து புதிய உலக சாதனை படைக்கும் நோக்கத்தில் அமெரிக்காவின் மெக்சிகோ நகரின் அருகில் உள்ள அல்புகியுர்கியூ பகுதியை சேர்ந்த டாய் பிராட்லி மற்றும் ரஷ்யாவை சேர்ந்த லியோனிட் டியுக்டேவ் ஆகியோர் ஜப்பானின் சாகா நகரில் இருந்து புறப்பட்டனர்.

சுமார் 15 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து சென்ற இவர்கள் தொடர்ந்து 160 மணி நேரத்தில் பசிபிக் பெருங்கடலின் மேல்பகுதி வழியாக சுமார் 7 ஆயிரம் மைல்களை (11 ஆயிரத்து 265 கிலோ மீட்டர்) கடந்தனர். முந்தைய உலக சாதனையான 137 மணி நேரம் மற்றும் 5,209 மைல்கள் என்ற இரு தனிப்பட்ட சாதனைகளையும் இந்த புதிய சாதனையின் மூலம் முறியடித்துவிட்டு இன்று பத்திரமாக கலிபோரினியா கடற்கரையோரமுள்ள மெக்சிகோ நகரின் அருகே அவர்கள் பத்திரமாக தரையிறங்கினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More