May 31, 2023 5:18 pm

கடந்த அரசாங்கத்தில் பல தடவைக்கு மேல் பேசி பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை | புதிய அரசாங்கம் அதை தீர்க்குமா? | சிவசக்தி ஆனந்தன்கடந்த அரசாங்கத்தில் பல தடவைக்கு மேல் பேசி பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை | புதிய அரசாங்கம் அதை தீர்க்குமா? | சிவசக்தி ஆனந்தன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வவுனியா கூமாங்குளம் சித்தி வினாயகர் வித்தியாலயத்தில் வயோதிபர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த10 வருட காலத்தில்  பல்வேறுபட்ட நெருக்கடிகள் பல துன்பங்கள்,பல துயரமான நிகழ்வுகள் இருந்தது தற்சமயம் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த ஆட்சி மாற்றத்தினூடாக சாதாரண அடித்தட்டு மக்களுக்கு பெரிய சுமையாக இருந்த அத்திய அவசியப் பொருட்களின் விலை வாசியை குறைத்திருக்கிறது உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சியான சந்தோசமான விடயம் இருந்தபோதும் பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகும் இந்த அரசாங்கம் விலைவாசியை மீண்டும் அதிகரிக்க கூடாது அதற்கு உத்தர வாதம் ஒன்றை வழங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உரை நிகழ்த்துகையில் புதிய அரசாங்கத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு பல விடயங்கள் குறித்து பேசியிருக்கிறோம். முதல் கட்டமாக எமது மக்களின் அன்றாடம் உள்ள அடிப்படை பிரச்சினைகள் பற்றி பேசியிருக்கிறோம். தமிழ் மக்களுடைய காணிகளை கையளிப்பதுஇ மீள்குடியேற்றம் செய்வது,நீண்டகாலமாக சிறையில் இருக்கும் அரசியல்கைதிகளின் விடுதலை, பல வருடங்களாக ரகசிய முகாம்களில் தடுத்துவைத்திருக்கும் கைதிகள் விடுதலை, ஆகியவற்றை முதல்கட்டமாக அரசாங்கத்திடம் இந்த கேரிக்கையை முன்வைத்திருக்கிறோம்.எனத்தெரிவித்தார்.

மேலும் கட்டம் கட்டமாக ஒரு அரசியல் தீர்வை முன்வைக்குமாறும் இந்த அரசாங்கத்திடம் பேசியிருக்கிறோம். இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு அப்புறம் தான் இந்த அரசாங்கம் உறுதியான சரியான நிலைப்பாட்டை எடுக்கும்.என்று தெரிவித்ததுடன்  அதற்கு முன் இந்த 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை செய்கிறது அதனால் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பக்கபலமாக இருக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

அத்துடன் கடந்த அரசாங்கத்தில்  18தடவைக்கு மேல் பேசி குறைந்தபட்சம் இந்த மக்களுக்கு இருக்கக்கூடிய அன்றாட பிரச்சனைகளை தீர்க்க பல முயற்சிகளை எடுத்தோம். இருந்தபோதும் சில அமைச்சர்களின் அதிகார துஸ்பிரயோகம் காரணமாக அதிகாரிகள்,சமூர்த்தி உத்தியோகத்தர்,பிரதேச செயலாளர் போன்றவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலமை காணப்பட்டது. அவர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள்,பயமுறுத்தப்பட்டார்கள்,என்று குற்றம்சாட்டினார். இந்த நிலமைகள் இன்று மாறியிருக்கு. சிங்கள மக்களைக்கூட இந்த அடக்கு முறையிலிருந்து விடுவித்த பெரிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு இருக்கு. ஒருசிங்களவர் தெரிவிக்கையில் ஊழல்,மோசடிஇலஞ்சத்துடன் கடந்த அரசாங்கம் இருந்தது என்று எங்களுக்கு தெரியாது தமிழ் மக்கள்தான் எங்களை காப்பாற்றினார்கள் எனத்தெரிவித்தார். இந்த மாற்றத்தை கொண்டு வந்தவர்கள் தமிழ் மக்கள் ஆகவே பொறுப்பு கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது அரசாங்கம் இவற்றையேல்லாம் உணர்ந்து இந்த 2015 ம் ஆண்டு தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டிய தேவை இந்த அரசாங்கத்திற்கு இருக்கிறது. சர்வதேசம் கூட தமிழரின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் பிரச்சனைகளை தீர்த்தால்தான் நாங்கள் நிதியுதவி வழங்குவோம் என்று கூறியிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

ஜரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருக்கு இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்,காணாமல்போனோர்க்கு என்ன நடந்தது என்று அரசாங்கம் தெரிவிக்க வேண்டும். ஆகவே பதிய அரசாங்கம் சர்வதேசத்திடமிருந்து நல் மதிப்பையும் நிதியையும் பெறவேண்டுமென்றால் தமிழ மக்களின் அன்றாடப்பிரச்சினையில் இருந்து அரசியல் பிரச்சினை வரை தீர்வு காணப்படவேண்டுமென்று தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் க. உதயராசா கலந்துகொண்டார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்