June 8, 2023 6:53 am

இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள துணைப் பிரதமர் நிக்கின் பேட்டிஇங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள துணைப் பிரதமர் நிக்கின் பேட்டி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இங்கிலாந்து துணைப் பிரதமரும் லிபரல் ஜனநாயக கட்சி செயலருமான நிக் கிளெக் சமீபத்தில் இங்கிலாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

இந்தியாவில் பிரபலமான ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியைப் போன்று நடைபெற்ற அந்த நேர்காணலில் பல கேள்விகளுக்கு நிக் சுவாரஸ்யமாக பதிலளித்தார். அப்போது, அவரிடம் பேட்டி எடுத்தவர், கடந்த ஐந்து வருடங்களில் எத்தனை முறை பிரதமர் டேவிட் கேமரூனை அறைய நினைத்தீர்கள்? என்று கேட்டார். உடனடியாக “ஒரு சில முறை நான் அவரை அறைய விரும்பினேன்” என்று பதிலளித்தார் நிக்.

பேட்டி கண்டவர் விடாப்பிடியாக ஒரு 10 அல்லது 20 முறை விரும்பியிருப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு “இல்லை அதற்கும் அதிகமாக நிறைய சந்தர்ப்பங்களில் அவரை அறைய விரும்பினேன்” என்று தெரிவித்தார்.

நிக்கின் இந்த பேட்டி பிரதமர் அலுவலகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்