0
வெளிநாடுகளில், போலி நிறுவனங்களின் பெயரில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் உட்பட, பல்வேறு உலகத் தலைவர்கள், கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்துள்ள அதிர்ச்சி தகவல் அம்பலமாகி உள்ளது. ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியாகியுள்ள, இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் பட்டியலில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உட்பட, 500 இந்தியர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளன.