இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறியுள்ளார்.
இந்தியாவுடன் அமைதியான மற்றும் பதற்றமில்லாத உறவை வைத்துக் கொள்ள பாகிஸ்தான் விரும்புகிறது என்பதில் எந்த சந்தேகமும் இருக்கக் கூடாது.
பாகிஸ்தானில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை யார் சீர்குலைக்கிறார்கள் என்பதில் நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறோம். தீவிரவாத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் மக்கள் உறுதியுடன் உள்ளனர்.
அமைதி பேச்சுவார்த்தை தொடர்ச்சி குறித்து அப்துல் பாசித் இன்று தெரிவித்த கருத்தே பாகிஸ்தானின் முதல் அதிகாரபூர்வ கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.