அமெரிக்காவின் அதிபராகும் வாய்ப்பு ஹிலாரி கிளிண்டனுக்கு இல்லை என கட்சியின் சக அதிபர் போட்டியாளர் பெர்னி சாண்டர்ஸ் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 8 பிரதிநிதிகள் தேர்தலில் 7 இடங்களில் பெர்னி சாண்டர்ஸ் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் வெற்றி நம்பிக்கையை தக்க வைத்துள்ள பெர்னி சாண்டர்ஸ் பென்சில்வேனியா மாகாணத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது ஹிலாரி கிளிண்டைனை விமர்சித்து பேசினார்.
முன்னிலை வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை கருத்தில் கொண்டு அவர் இவ்வகையில் பேசுவதாக கூறப்படுகிறது. எனினும் வரும் 19-ம் தேதி நியுயார்க்கிலும், 26-ம் தேதி ஐந்து கிழக்கு மாகாணங்களில் நடக்கும் தேர்தல்களிலும் ஹிலாரி கிளிண்டனுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 8-ம் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலில் இடம் பிடிப்பதற்கான பிரதிநிதிகள் தேர்தல் விறுவிறுப்படைந்துள்ளன.