செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மறைந்த அன்னை தெரசாவுக்கு பிரிட்டனின் உயரிய விருதுமறைந்த அன்னை தெரசாவுக்கு பிரிட்டனின் உயரிய விருது

மறைந்த அன்னை தெரசாவுக்கு பிரிட்டனின் உயரிய விருதுமறைந்த அன்னை தெரசாவுக்கு பிரிட்டனின் உயரிய விருது

1 minutes read

உலக அளவில் இருக்கும் ஆசிய சமூக மக்களின் சாதனைகளை கெளரவிப்பதற்காக வழங்கப்படும் பிரிட்டனின் உயரிய நிறுவனர் விருது (ஃபவுண்டர்ஸ் அவார்ட்), மறைந்த அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது.

லண்டனில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு விருதைப் பெறுவதற்காக, தெரசாவின் உறவினர்களில் தற்போது உயிருடன் இருக்கும் அவரது 72 வயது மருமகள் அகி போஜாஸியு, இத்தாலியில் இருந்து வந்திருந்தார்.

கத்தோலிக்க மத கன்னியாஸ்திரியான தெரசா, கொல்கத்தாவில் “மிஷினரி ஆஃப் சாரிடீஸ்’ என்ற தொண்டு அமைப்பைத் தொடக்கி, அந்நகரில் வசிக்கும் நலிந்த பிரிவினருக்கும், சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கும் சேவை செய்து வந்தார். அவர் கடந்த 1997ஆம் ஆண்டு தனது 87ஆவது வயதில் காலமானார்.

பிரிட்டனில் இருந்து 6ஆவது ஆண்டாக வழங்கப்படும் இந்த விருதுகள், வணிகம், தொண்டு, பொழுதுபோக்கு, கலாசாரம், விளையாட்டு ஆகிய துறைகளில் தன்னிகரற்ற சாதனைகளைப் புரிந்த ஆசியர்களுக்காக வழங்கப்படுகின்றன. லெமன் குழும அதிபர் பால் சாகூ, இந்த விருதுகளை கடந்த 2010ஆம் ஆண்டு நிறுவினார்.

மேலும், லண்டனில் மகாத்மா காந்தியின் சிலையை நிறுவுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த லண்டன் வாழ் இந்தியர் ராமி ரேஞ்சருக்கு தொண்டுக்கான விருதும், இந்தோராமா கார்ப்பரேஷன் நிறுவன அதிபர் பிரகாஷ் லோகியாவுக்கு வணிகத்துக்கான விருதும் வழங்கப்பட்டன.

மேலும், ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப் படத் தயாரிப்பாளர் ஆசிஃப் கபாடியாவுக்கும், பிரபல தொலைக்காட்சி நடிகர் குணால் நய்யார் உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.