அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் எங்கு பார்த்தாலும் வானை தொடும் வகையில் உயரமான கட்டிடங்கள் காணப்படும். உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா கட்டிடமும் துபாயில் தான் உள்ளது. 1.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9 ஆயிரம் கோடி) செலவில் 828 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்ட இந்த கட்டிடம் கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது.
துபாயில் புர்ஜ் கலிபா உள்ளிட்ட பல உயரமான கட்டிடங்களை உருவாக்கிய எமர் என்ற கட்டுமான நிறுவனம் தற்போது புர்ஜ் கலிபாவை விட உயரமான கட்டிடத்தை கட்ட திட்டமிட்டு உள்ளது.
1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6 ஆயிரத்து 700 கோடி) செலவில் இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கட்டுமான நிறுவனத்தின் தலைவர் முகமது அலப்பர் தெரிவித்து உள்ளார்.
மேலும் 2020-ம் ஆண்டுக்குள் இந்த கட்டிடம் துபாய்க்கு பரிசாக அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.