செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிரேசில் அதிபர் டில்மா ரூùஸஃபை பதவி நீக்கம் செய்வது தொடர்பான விவாதம் தொடக்கம்பிரேசில் அதிபர் டில்மா ரூùஸஃபை பதவி நீக்கம் செய்வது தொடர்பான விவாதம் தொடக்கம்

பிரேசில் அதிபர் டில்மா ரூùஸஃபை பதவி நீக்கம் செய்வது தொடர்பான விவாதம் தொடக்கம்பிரேசில் அதிபர் டில்மா ரூùஸஃபை பதவி நீக்கம் செய்வது தொடர்பான விவாதம் தொடக்கம்

1 minutes read

முறைகேடு புகாருக்கு ஆளாகியுள்ள பிரேசில் அதிபர் டில்மா ரூùஸஃபை பதவி நீக்கம் செய்வது தொடர்பான விவாதம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அந்நாட்டின் சொலிசிட்டர் ஜெனரல் ஹோúஸ எடுவார்டோ கார்டோúஸா அதில் கலந்து கொண்டு, அதிபர் சார்பாக முக்கிய வாதத்தை முன்வைத்தார். அவர் கூறியதாவது:

அதிபர் டில்மா ரூùஸஃப் ஊழலில் ஈடுபட்டார் என்று நேரடியான குற்றச்சாட்டு எதுவும் இல்லை.

அதிபருக்கு எதிராக கொண்டு வரப்படக் கூடிய உண்மையான குற்றச்சாட்டுகளுக்கு மட்டுமே பதில் அளிக்க முடியும்.

அதிபரைப் பதவி நீக்கம் செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகள் நாட்டு மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் எதிராக நிகழ்த்தப்படும் வன்முறையாகும் என்றார் அவர்.

நாடாளுமன்றத்தின் கீழவைத் தலைவராக உள்ள எடுவார்டோ குன்யாவின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, அதிபர் டில்மா ரூùஸஃப் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பெட்ரோபிராஸ் என்கிற எண்ணெய் நிறுவன ஒப்பந்தம் தொடர்பாக பேரவைத் தலைவர் கோடிக்கணக்காகப் பணம் பெற்றார் என்று எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையைத் தடுப்பதற்கு அதிபர் டில்மா ரூùஸஃப் உதவவில்லை என்கிற ஆத்திரத்தில் அதிபர் மீது அபாண்ட பழி சுமத்தப்படுகிறது என்று சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.

பதவி நீக்கத் தீர்மானத்தை நாடாளுமன்றக் கீழவையில் அறிமுகம் செய்த எம்.பி.யான மிகுவெல் ரெயால் ஜூனியர் கூறுகையில், அதிபர் டில்மாவின் செயல்பாட்டினால்தான், நாடு தற்போதைய பொருளாதாரத் தேக்க நிலையில் சிக்கியுள்ளது என்றார்.

பதவி நீக்கத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். பிரேசில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கிறது என்கிற தோற்றத்தை அளிக்கும் விதமாக நாட்டின் வருவாயை உயர்த்திக் காட்டி, அதிபர் டில்மா ரூùஸஃப் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

கடந்த 2014-இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக இந்த முறைகேட்டில் அவர் ஈடுபட்டதாக எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அதிபரைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பாகப் பரிசீலிக்க 65 எம்.பி.க்கள் கொண்ட விசாரணைக் குழுவை அந்நாட்டு நாடாளுமன்றம் கடந்த மாதம் அமைத்தது. இக்குழுவின் விசாரணை முடிவில் 38 பேர் பதவி நீக்கத்துக்கு ஆதரவாகவும், 27 பேர் பதவி நீக்கம் செய்யத் தேவையில்லை எனவும் வாக்களித்தனர்.

அடுத்த கட்டமாக, நாடாளுமன்றக் கீழவையில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அங்கு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் அந்தத் தீர்மானம் நிறைவேறினால் மட்டுமே அதனை மேலவை விவாதிக்கும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.