எகிப்தில் சனிக்கிழமை பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து எகிப்து சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காலித் மெகஹித் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அஸ்வன் நகரிலிருந்து சனிக்கிழமை புறப்பட்ட ரயில் கெய்ரோ நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக அந்த ரயில் மோதியது.
இதில், வாகனத்தில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். அதில், 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சம்பவம் நடந்த இடத்துக்கு 8 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1