அமெரிக்காவில் நவ., 8ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க உள்ளது. இதில் களம் காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் நியூயார்க்கில் நடந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் 57.9 சதவீத ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.
இதேபோல், நியூயார்க் நகரில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 60.5 சதவீத ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.