செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இசை உலகின் சூப்பர் ஸ்டார் பிரின்ஸ் மரணம்இசை உலகின் சூப்பர் ஸ்டார் பிரின்ஸ் மரணம்

இசை உலகின் சூப்பர் ஸ்டார் பிரின்ஸ் மரணம்இசை உலகின் சூப்பர் ஸ்டார் பிரின்ஸ் மரணம்

1 minutes read

ரிதம் அன்ட் புளூஸ், ஃபங்க், ராக் அண்ட் ரோல் போன்ற புதியவகை மேற்கத்திய இசையை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவராக கருதப்படும் பிரின்ஸ் ரோஜர்ஸ் நெல்சன்(57) அமெரிக்க மக்களால் பாப் இசை உலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டார்.

உலகம் முழுவதும் தனது இசைக்குழுவுடன் பயணம் செய்து ‘பிரின்ஸ்’ என்ற ஒற்றைப் பெயரால் மிகவும் பிரபலமான இசைக்கலைஞராக வலம்வந்த இவர், அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தில் உள்ள மின்னியேபோலிஸ் நகரில் வசித்து வந்தார்.

நேற்று தனது வீட்டில் உள்ள லிப்ட்டின் உள்ளே மர்மமான முறையில் பிரின்ஸ் இறந்துகிடந்தார். அவரது மரணத்துக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரின்ஸ் ரோஜர்ஸ் நெல்சனின் மரணம் தொடர்பாக, சவுதி அரேபியா, இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஒபாமா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘பிரின்ஸின் திடீர் மரணத்தால் துயரப்படும் உலகின் கோடிக்கணக்கான இசை ரசிகர்களின் வரிசையில் நானும் மிச்சேலும் இணைந்து வருந்துகிறோம்.

இசையின் உண்மையான வடிவத்தை உரிய முறையில் மக்களிடம் கொண்டுசென்று பிரபலப்படுத்திய வெகுசிலரில் பிரின்ஸ் மிகவும் குறிப்பிடத்தக்க இசைக்கலைஞராவார். இசையில் பல புதிய பரிணாமங்களை அவர் மக்களிடம் கொண்டு சேர்த்தார். இசையுலகின் சிருஷ்டிகர்த்தாவாக திகழ்ந்த அவரை பிரிந்து வாழும் குடும்பத்தார், இசைக்குழுவினர் மற்றும் அவர்மீது பேரன்பு வைத்திருக்கும் அனைவருடனும் எங்களது எண்ணமும், பிரார்த்தனையும் எப்போதும் இருக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.