செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிரிட்டனில் வசிக்கும் பெரும் கோடீஸ்வரர்களில் இந்தியர்கள் முதல் இடம்பிரிட்டனில் வசிக்கும் பெரும் கோடீஸ்வரர்களில் இந்தியர்கள் முதல் இடம்

பிரிட்டனில் வசிக்கும் பெரும் கோடீஸ்வரர்களில் இந்தியர்கள் முதல் இடம்பிரிட்டனில் வசிக்கும் பெரும் கோடீஸ்வரர்களில் இந்தியர்கள் முதல் இடம்

1 minutes read

பிரிட்டனில் வசிக்கும் பெரும் கோடீஸ்வரர்களில், இந்தியர்கள் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளனர்.

பிரிட்டனில் வசிக்கும் பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியலை “தி சன்டே டைம்ஸ்’ பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

இந்தியாவின் மும்பையில் பிறந்து தற்போது பிரிட்டனில் வசிக்கும் டேவிட், சைமன் ரியூபன் சகோதரர்கள் 13.1 பில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.1.25 லட்சம் கோடி) சொத்துகளுடன் பட்டியலில் முதலாவதாக உள்ளனர். அதற்கடுத்து, இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் ஹிந்துஜா சகோதரர்கள் 13 பில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.1.24 லட்சம் கோடி) சொத்துகளுடன் 2ஆவது இடம் பெற்றுள்ளனர்.

இதில், ரியூபன் சகோதரர்களுக்கு லண்டனில் ஆக்ஸ்போர்ட் விமான நிலையம், லண்டன் ஹெலிபோர்ட் ஆகியவை சொந்தமாக உள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அவர்களின் சொத்து மதிப்பு 3.4 பில்லியன் பவுண்ட் அதிகரித்திருக்கிறது.

அதேசமயம், 2008ஆம் ஆண்டில் 27.7 பில்லியன் பவுண்ட் சொத்துகளுடன் முன்னிலையில் இருந்த பிரிட்டன் வாழ் இந்திய தொழிலதிபரும், பிரபல உருக்கு ஆலை அதிபருமான லட்சுமி என். மிட்டலின் சொத்து மதிப்பு தற்போது 7.12 பில்லியன் பவுண்டுகளாக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.68 ஆயிரம் கோடி) குறைந்துள்ளது. இதனால், கடந்த ஆண்டில் அவர் வகித்த 7ஆவது இடத்தில் இருந்து 11ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பிரிட்டனில் இந்த ஆண்டு 120 பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர். இருப்பினும், லண்டனில் வசிக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையானது, கடந்த ஆண்டில் இருந்த 80இல் இருந்து 77ஆகக் குறைந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.