செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கூட்டாட்சி முறை என்பது, இலங்கை அரசியல் சட்டத்திற்கு எதிரானது-அமைச்சர் மஹிந்தா சமரசிங்கேகூட்டாட்சி முறை என்பது, இலங்கை அரசியல் சட்டத்திற்கு எதிரானது-அமைச்சர் மஹிந்தா சமரசிங்கே

கூட்டாட்சி முறை என்பது, இலங்கை அரசியல் சட்டத்திற்கு எதிரானது-அமைச்சர் மஹிந்தா சமரசிங்கேகூட்டாட்சி முறை என்பது, இலங்கை அரசியல் சட்டத்திற்கு எதிரானது-அமைச்சர் மஹிந்தா சமரசிங்கே

1 minutes read

இலங்கையில், கூட்டாட்சி முறையை கொண்டு வர வேண்டும்’ என்ற, தமிழ் தேச கூட்டமைப்பின் கோரிக்கையை, ஆளுங்கட்சி நிராகரித்து விட்டது. இலங்கையில், அதிபர் ஆட்சி

முறைக்கு பதிலாக, பார்லிமென்ட்டுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில், புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்படுகிறது. இதற்கான பணிகளை, அரசியல் சட்ட வரைவு குழு செய்து வருகிறது.

இந்த குழு, பல்வேறு தரப்பினரிடம் இருந்து பரிந்துரைகளை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘இலங்கையில், தமிழர்கள் உரிய அதிகாரத்துடன் வாழ, கூட்டாட்சி முறையை கொண்டு வரவேண்டும்’ என, வடக்கு மாகாண சட்டசபை, தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், இலங்கை அரசு இதை ஏற்கவில்லை. ஆளுங்கட்சியான, இலங்கை

சுதந்திர கட்சியைச் சேர்ந்த, அமைச்சர் மஹிந்தா சமரசிங்கே, இதுகுறித்து கூறியதாவது:

கூட்டாட்சி முறை என்பது, இலங்கை அரசியல் சட்டத்திற்கு எதிரானது; இதை ஏற்க முடியாது. இதன் மூலம், மீண்டும் பயங்கரவாதம் தலை துாக்கும். 13வது சட்ட திருத்தம் தான், இந்தியாவின் நிலைப்பாடு. அதில், கூடுதல் அதிகாரங்கள் தருவது பற்றி பரிசீலிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.இலங்கையில், புதிய அரசியல் சட்டம், 2017ல், அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

13வது சட்டத்திருத்தம்:ராஜிவ், இந்திய பிரதமராக இருந்தபோது, 1987ல், இந்தியாவின் தலையீட்டால், இலங்கை அரசியல் சட்டத்தில், 13வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தமிழர் வசிக்கும் பகுதிகள் தனி மாகாணங்களாக உருவாக்கப்பட்டு, அதிகாரம் வழங்க உறுதியளிக்கப்பட்டது. ஆனால், ‘இது, அதிகாரம் ஏதுமில்லாத, ஏமாற்று நடவடிக்கை’ என, இலங்கை தமிழ் கட்சிகள் கூறி வருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.