செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உலகின் மிகப் பிரபல கடிகாரமான “பிக்பென்’னைப் பழுது பார்க்கும் பணி அடுத்த ஆண்டுஉலகின் மிகப் பிரபல கடிகாரமான “பிக்பென்’னைப் பழுது பார்க்கும் பணி அடுத்த ஆண்டு

உலகின் மிகப் பிரபல கடிகாரமான “பிக்பென்’னைப் பழுது பார்க்கும் பணி அடுத்த ஆண்டுஉலகின் மிகப் பிரபல கடிகாரமான “பிக்பென்’னைப் பழுது பார்க்கும் பணி அடுத்த ஆண்டு

1 minutes read

உலகின் மிகப் பிரபல கடிகாரமான “பிக்பென்’னைப் பழுது பார்க்கும் பணி அடுத்த ஆண்டு தொடங்கும் என பிரிட்டன் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதற்கு 2.9 கோடி பவுண்டு  செலவாகும் என அரசு தெரிவித்தது.
பிக் பென் கடிகாரமும் அது அமைக்கப்பட்டுள்ள எலிஸபெத் கோபுரமும் முற்றிலும் பழுது பார்க்கப்படும்.
இதற்கு 3 ஆண்டு காலமாகும். கடிகாரம் ஓடுவது நிறுத்தப்பட்டாலும், மிக முக்கிய நிகழ்ச்சிகளைக் குறிக்க மணியடிக்கும்படி செய்யப்படும்.
கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டனின் அடையாளமாக இருந்து வருகிறது பிக்பென் கடிகாரம்.
முன்னதாக பழுது பார்க்கும் பணிக்கு ரூ. 400 கோடி செலவாகும் என்று பிரிட்டன் நாடாளுமன்ற நிதிக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ரூ.290 கோடியில் பராமரிப்பு நடைபெறவுள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள கோபுர கடிகாரம் 1859-இல் அமைக்கப்பட்டது. கடிகாரம் அமைந்துள்ள எலிஸபெத் கோபுரத்தின் உயரம் 315 அடி. அது முற்றிலும் சரி செய்யப்படும். கடிகாரத்தை அடைய கோபுரத்துக்குள் தற்போது 334 படிகள் உள்ளன. புதிதாக அங்கு லிஃப்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
1976-இல் நடைபெற்ற பழுது பார்க்கும் பணியின்போது 26 நாட்களுக்கு கடிகாரம் நிறுத்தப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.