பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வெனிசுலாவில், கடும் மின்சாரப் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டு அரசு அலுவலகங்கள் வாரத்தில் திங்கள், செவ்வாய் கிழமை மட்டுமே செயல்பட உள்ளது. மிக அத்தியாவசியமான பணிகளைத் தவிர, பிற பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகளுக்கு புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு அரசு விடுமுறை நாட்கள் என்பதால், திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்கள் மட்டுமே இனி அரசு அலுவலகங்கள் திறந்திருக்கும். மேலும் ஆரம்ப மற்றும் உயர் பள்ளிகளும் ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மூடப்படவுள்ளது.
11