பாகிஸ்தானில், சூரிய ஒளி இல்லாவிட்டால், செயல்பட முடியாமல் முடங்கிப் போகும் மூன்று குழந்தைகள், மருத்துவர்களுக்கே புரியாத புதிராக விளங்குகின்றனர்.
பாகிஸ்தானின், குவெட்டா நகரை சேர்நதவர் ஹஷீம். குவெட்டா பல்கலையில், காவலராக பணியாற்றுகிறார். இவருக்கு, ஐந்து ஆண், ஒரு பெண் என ஆறு குழந்தைகள். இதில், ஒன்று முதல் 13 வயதுக்குட்பட்ட மூன்று ஆண் குழந்தைகள், மருத்துவர்களுக்கே புரியாத புதிராக திகழ்கின்றனர்.
இந்த மூவரும் சூரிய ஒளி படும்போது, பிற குழந்தைகளை போல சுறுசுறுப்பாக செயல்படுகின்றனர். ஆடல், பாடலுடன் உற்சாகமாக திரிகின்றனர். ஆனால், சூரியன் மறைந்துவிட்டால், கை, கால்கள் முடங்கி, நகர முடியாமல் செயல் இழந்து விடுகின்றனர். இது பற்றி அறிந்த அப்பகுதி மக்கள், அவர்களுக்கு, ‘சூரிய குழந்தைகள்’ என பெயரிட்டுள்ளனர்.
இக்குழந்தைகளை பரிசோதித்த, இஸ்லாமாபாத் பி.ஐ.எம்.எஸ்., மருத்துவமனை டாக்டர்கள், பல்வேறு சோதனைகளுக்கு பின்பும், காரணம் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இதுபற்றி, பி.ஐ.எம்.எஸ். மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், ‘மூன்று பேரிடமும் தீவிர பரிசோதனைகளை மேற்கொள்ள, ஒன்பது டாக்டர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, 100க்கும் அதிகமான சோதனைகள் செய்தும், எந்த முன்னேற்றமும் இல்லை. உலகளவில், 600 பேர் வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவித்தனர்.
20