எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் மட்டுமே, அணு ஆயுதங்களை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படும்,” என, வடகொரியா அதிபர் கிம் ஜாங் – யுன் கூறியுள்ளார்.
கிழக்காசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா, உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து, அந்த நாட்டின் மீது, ஐ.நா., கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.
கடுமையான எதிர்ப்பு காரணமாக, வடகொரியா, உலக அரங்கில் தனிமைப்பட்டு நிற்கிறது. இந்நிலையில், அந்நாட்டின், ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் மாநாடு நடந்தது. இதை துவக்கி வைத்து, அந்த நாட்டு அதிபர், கிம் ஜாங் – யுன் பேசியதாவது:
வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்துவதை, உலக நாடுகள் தவறாக சித்தரிக்கின்றன. சொந்த பாதுகாப்பிற்காகவே, அணு ஆயுதங்கள் தயாரிக்கிறோம்; அணு ஆயுத பரவலை வடகொரியாவும் ஏற்கிறது.
அதேசமயம், எங்கள் நாட்டின் மீது மற்ற நாடுகள் தாக்குதல் நடத்தினால், அணுகுண்டு வீசி பதிலடி கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.