7
சீன அதிபர் ஜீ ஜின்பிங் கடந்த ஆண்டு பிரிட்டன் வந்தபோது, சீனாவுக்கான பிரிட்டன் தூதர் பார்பரா உட்வர்டிடம் சீன அதிகாரிகள் மரியாதையின்றி நடந்து கொண்டதாக பிரிட்டன் அரசி எலிசபெத் பேசிய விடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரண்மனையில் நடந்த விருந்தின்போது, பாதுகாப்பு அதிகாரிகளுடன் அரசி அவ்வாறு உரையாடிக் கொண்டிருந்தபோது அரசக் குடும்பத்து விடியோ பணியாளர் எடுத்த அந்த விடியோ, புதன்கிழமை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.