இலங்கையில், கொட்டித்தீர்த்த கனமழையால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர், பாதிக்கப்பட்டு உள்ளனர். எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.வங்க கடலில், உருவான, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இலங்கை யின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில், சில தினங்களாக, பலத்த மழை பெய்தது; பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள் சேதம்மொத்தம், 19 மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுஉள்ளனர். ஏராளமான வீடுகள், முழுமையாக சேதமடைந்து உள்ளன. ராணுவ வீரர்கள், மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கி, எட்டு பேர் உயிரிழந்தனர்; மேலும், ஒன்பது பேரின் நிலைமை தெரிய வில்லை.
மின் இணைப்பு துண்டிப்புதலைநகர் கொழும்புவில், இருநாட்களுக்கு முன், ஒரே நாளில், 26 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது; போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் கம்பங்கள் சாய்ந்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. காற்றழுத்த தாழ்வு நிலை அங்கிருந்து நகர்ந்துள்ளதால், நேற்று சற்று மழை குறைந்தது.
8