செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தலிபான் பயங்கரவாத தலைவன் முல்லா அக்தர் மன்சூர்கொல்லப்பட்டதாக தகவல்? தலிபான் பயங்கரவாத தலைவன் முல்லா அக்தர் மன்சூர்கொல்லப்பட்டதாக தகவல்?

தலிபான் பயங்கரவாத தலைவன் முல்லா அக்தர் மன்சூர்கொல்லப்பட்டதாக தகவல்? தலிபான் பயங்கரவாத தலைவன் முல்லா அக்தர் மன்சூர்கொல்லப்பட்டதாக தகவல்?

1 minutes read

மே 23-

அமெரிக்கா கூட்டுப்படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில், தலிபான் பயங்கரவாத தலைவன் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டான். எனினும், இதை தலிபான்கள் மறுத்துள்ளனர்.

 

ஆப்கனில் செயல்பட்டு வரும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலிபான் தலைவர் முல்லா ஒமர் கொல்லப்பட்ட பின், அந்த அமைப்பின் தலைவராக, முல்லா அக்தர் மன்சூர்

நியமிக்கப்பட்டான். ஆப்கனில், தலிபான்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து வந்த அவன், அமெரிக்க படைகளுக்கு எதிரான

 

 

தாக்குதலை தீவிரப்படுத்தி வந்தான். இதில், நுாற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், ஏராளமான வீரர்களும் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மன்சூர் மீது தாக்குதல் நடத்த, அமெரிக்க படைகள் முயன்று வந்தன. இந்நிலையில், ஆப்கனின் எல்லையையொட்டி, பாகிஸ்தான் பகுதியில் பதுங்கி இருந்த மன்சூர், அமெரிக்கப் படைகளால், நேற்று முன்தினம் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள அகமத்வால் நகருக்கு அருகே, வாகனம் ஒன்றில், மன்சூர் சென்றபோது, அமெரிக்க விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் மன்சூர் கொல்லப்பட்டான். மன்சூருடன் சென்ற மற்றொரு பயங்கரவாதியும், இந்த தாக்குதலில் உயிரிழந்தான். மன்சூர் பலியானது, அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

 

எனினும், தாக்குதலில் பலியானது, மன்சூர் தான் என்பதை, அமெரிக்கா உறுதிப்படுத்த வில்லை. மரபணு சோதனைக்கு பின்பே, அமெரிக்கா உறுதிப்படுத்தும் என தெரிகிறது. அதேசமயம், மன்சூர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலை, தலிபான்கள் மறுத்துள்ளனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.