செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வியட்னாம் மீது விதிக்கப்பட்ட தடை முற்றிலும் நீக்கம் | ஜனாதிபதி ஒபாமா அறிவிப்புவியட்னாம் மீது விதிக்கப்பட்ட தடை முற்றிலும் நீக்கம் | ஜனாதிபதி ஒபாமா அறிவிப்பு

வியட்னாம் மீது விதிக்கப்பட்ட தடை முற்றிலும் நீக்கம் | ஜனாதிபதி ஒபாமா அறிவிப்புவியட்னாம் மீது விதிக்கப்பட்ட தடை முற்றிலும் நீக்கம் | ஜனாதிபதி ஒபாமா அறிவிப்பு

1 minutes read

அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்ய வியட்னாம் மீது விதிக்கப்பட்டு இருந்த தடை முற்றிலும் நீக்கப்படுவதாக ஒபாமா அறிவித்தார்.

1955 முதல் 20 ஆண்டுகள் வியட்னாம் மீது அமெரிக்க தொடுத்த போர் 1975-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. வரலாற்றில் வியட்னாம் போர் என்று அழைக்கப்படும் இந்த போரில் அமெரிக்க படைகள் பெரும் இழப்பை சந்தித்தது. இதன்பிறகு வியட்னாம் மீது பொருளாதார மற்றும் ராணுவ தடைகளை அமெரிக்கா விதித்தது. பின்னர் படிப்படியாக தடைகளை நீக்கி வந்தது. எனினும் ராணுவ தளவாடங்களை விற்பதற்கான தடை மட்டும் தொடர்ந்து நீடித்தது.

சமீபகாலமாக தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதைத்தொடர்ந்து அதன் அண்டை நாடான வியட்னாமிற்கு முக்கியத்துவம் அளிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.

ஜனாதிபதி ஒபாமா தனது பதவி காலம் முடிவதற்குள் பகைமை நாடுகளை நட்பு வட்டத்துக்குள் கொண்டு வரும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக ஒபாமா நேற்று முன்தினம் முதல் வியட்நாமில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் வியட்னாமிற்கு பயணம் செய்வது இதுவே முதல் முறை.

நேற்று முன்தினம் ஒபாமாவின் தனி விமானம் ஹனோய் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பயணத்தின் 2-ம் நாளான நேற்று ஒபாமா, வியட்னாம் அதிபர் டிரான் தாய் குவாங்கை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே உறவை மேம்படுத்துவது குறித்து இருவரும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருநாடுகளின் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது ஒபாமா கூறியதாவது:-

இரு நாடுகளின் உறவை பலப்படுத்துவதற்கான முயற்சியாகவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். அமெரிக்காவிடம் இருந்து ஆயுத கொள்முதல்செய்வதற்கு கடந்த 50 ஆண்டுகளாக விதிக்கப்பட்டு இருந்த தடை முற்றிலும் நீக்கிக் கொள்ளப்படுகிறது. இந்த முடிவு சீனாவை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டது அல்ல. எங்களைப் பொறுத்தவரை வியட்னாமில் இயல்பான நிலை நிலவிடவேண்டும் என்றே விரும்புகிறோம். அதற்காகவே இந்த நடவடிக்கை.

இந்த நேரத்தில் இரு நாடுகளும் பரஸ்பர நம்பிக்கையும், ராணுவ ஒத்துழைப்பில் இணைந்து செயல்படுவதும் அவசியம் ஆகும். எனவேதான் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் மீது விதிக்கப்பட்ட தடைகளை முற்றிலுமாக நீக்குகிறோம். இதனால் இரு நாடுகளும் பயன்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.