செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வரும் ஆகஸ்ட் மாதம் அன்னை தெரசாவின் படைப்புகள் வெளியீடுவரும் ஆகஸ்ட் மாதம் அன்னை தெரசாவின் படைப்புகள் வெளியீடு

வரும் ஆகஸ்ட் மாதம் அன்னை தெரசாவின் படைப்புகள் வெளியீடுவரும் ஆகஸ்ட் மாதம் அன்னை தெரசாவின் படைப்புகள் வெளியீடு

1 minutes read

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், கத்தோலிக்க மத புனிதராக விரைவில் அறிவிக்கப்படவுள்ளவருமான அன்னை தெரசாவின் படைப்புகள், வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த கிரெளன் பதிப்பக குழுமம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

அன்னை தெரசா எழுதி, இதுவரை வெளிவராத படைப்புகளைத் தொகுத்து, “கருணைக்கு அழைப்பு: அன்புக்கு இதயங்கள்: சேவையாற்றுவதற்குக் கரங்கள்’ என்ற பெயரில் வரும் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி புத்தகமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். அன்புக்கும், இரக்கத்துக்கும் இந்தப் புத்தகத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கும் பேராயர் பிரெய்ன் கோலோடீஜுக் இந்தப் புத்தகத்தை தொகுத்துள்ளார் என்று கிரெளன் பதிப்பகம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவில் வாழ்ந்து, கடந்த 1997ஆம் ஆண்டு மறைந்த அன்னை தெரசாவுக்கு, வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கப்பட உள்ளது. ஏற்கெனவே, அன்னை தெரசாவின் படைப்புகளைத் தொகுத்து, பேராயர் கோலோடீஜுக் கடந்த 2007ஆம் ஆண்டில் புத்தகமாக வெளியிட்டிருந்தார்..

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.