7
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி-7 அமைப்பின் மாநாடு ஜப்பானின் தென் மேற்கு டோக்கியோவில் உள்ள ஷிமாவில் இன்று(மே 26) துவங்குகிறது. இம்மாநாட்டில் தென் சீனக்கடலில் நிலவி வரும் சூழல் குறித்தும், பொருளாதார, பயங்கரவாதம் மற்றும் அகதிகள் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இலங்கை அதிபர் சிறிசேனா அழைக்கப்பட்டுள்ளார்.