செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 700 அகதிகள் படகு விபத்துகளில் பலி | ஐ.நா. அமைப்பு தகவல்700 அகதிகள் படகு விபத்துகளில் பலி | ஐ.நா. அமைப்பு தகவல்

700 அகதிகள் படகு விபத்துகளில் பலி | ஐ.நா. அமைப்பு தகவல்700 அகதிகள் படகு விபத்துகளில் பலி | ஐ.நா. அமைப்பு தகவல்

1 minutes read

மத்தியதரைக் கடலில் கடந்த சில நாட்களில் நிகழ்ந்த பல்வேறு படகு விபத்துகளில் 700-க்கும் மேற்பட்ட அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்று ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்தது.

ஐ.நா. அகதிகள் அமைப்பு செய்தித் தொடர்பாளர் கார்லோட்டா சமி செய்தியாளர்களிடம் இது குறித்து தெரிவித்தாவது:

போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வெளியேறும் அகதிகள், ஆழ்கடலில் செல்லத் தகுதியில்லாத சிறு மீன்பிடிப் படகுகளிலும், ரப்பர் படகுகளிலும் ஆபத்தான பயணம் மேற்கொண்டு ஐரோப்பா வருகின்றனர். அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வரும் இந்தப் படகுகள் நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக அகதிகள் வெளியேற்றம் பெரும் அளவில் அதிகரித்துள்ளது. இதையடுத்து படகு விபத்துகளும் அதிகரித்துள்ளன.

லிபியாவிலிருந்து சுமார் 670 பேரை ஏற்றி வந்த படகில் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கவில்லை.

அகதிகளை ஏற்றி வந்த மற்றொரு படகு அதனை இழுத்து வந்தது. இந்நிலையில் இழுத்து வரப்பட்ட படகில் வெள்ளம் புகுந்து கவிழ்ந்தது. அந்தப் படகின் கீழ் பகுதியில் இருந்த சுமார் 300 பேர் வெளியேறித் தப்பிக்க முடியாமல் கடலில் மூழ்கி இறந்தது உறுதியாகியுள்ளது. உடல்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தப் படகு கடலில் மூழ்குவது தெரிந்தும் முன்னால் சென்ற படகைச் செலுத்தியவர்கள் உதவி அளிக்க முன்வரவில்லை என்று உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை படகு கவிழ்ந்ததில் 100 பேர் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் 45 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. நூறுக்கும் மேற்பட்டோரின் நிலை குறித்து தெரியவில்லை. கடந்த சில நாட்களில் நிகழ்ந்த பல்வேறு படகு விபத்துகளில் 700-க்கும் மேற்பட்ட அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்றார் அவர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.