சீனாவின் மக்கள்தொகையில் 60-வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகி்ல் அதிக மக்கள்தொகையை கொண்ட நாடான சீனாவின் மொத்த மக்கள்தொகையில் தற்போது 16 சதவீதம் பேர் முதியவர்களாக உள்ளனர். அதேபோல், 16 முதல் 59 வயது வரையிலான மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இப்படியே சென்று கொண்டிருந்தால் வரும் 2020-ம் ஆண்டிற்குள் 30.7 பில்லியன் டாலர்களை வயதானோருக்கான பென்சன் உதவித்தொகையாக சீனா வழங்க வேண்டியிருக்கும். இந்நிலையில், சீனா அதிபர் ஜி ஜிங்பிங் இதுகுறித்து அவசர உயர்மட்டக் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.
அதில், முதியோரின் உடல்நலம் குறித்த திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள் பற்றி ஆலோசனை நடத்தினார்.