ஐரோப்பிய நாடுகளில் கோடை காலத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். அண்மைக் காலமாக, ஐரோப்பிய பிராந்தியத்தை குறிவைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூரமாக தற்கொலை தாக்குதல்களை அரங்கேற்றி பல உயிர்களை பழிவாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது மீண்டும் அங்குள்ள சுற்றுலா தலங்கள், ரெஸ்டாரண்டுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், ரெயில் நிலையங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஐரோப்பாவில் பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை வரும் ஆகஸ்டு 31-ந்தேதி அமலில் இருக்கும்.