கடந்த 2014ம் ஆண்டு, செப்.,1ம் தேதி பாக்., டிவி தலைமையகத்தின் மீது முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் கட்சியினரும், தாஹிருல் காதிரியின் கட்சியினரும் தாக்குதல் நடத்தினர். அப்போது போலீஸ் அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக இஸ்லாமாபாத் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு நடந்தது. பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதும் விசாரணைக்கு இம்ரான் கானும், தாஹிருல் காதிரியும் ஆஜராகவில்லை. இதனையடுத்து இருவருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் அவர்களை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
1