செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு மாற வேண்டும் | இலங்கைநாடாளுமன்ற ஆட்சி முறைக்கு மாற வேண்டும் | இலங்கை

நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு மாற வேண்டும் | இலங்கைநாடாளுமன்ற ஆட்சி முறைக்கு மாற வேண்டும் | இலங்கை

1 minutes read

இலங்கையில் அதிபர் ஆட்சி முறைக்குப் பதிலாக நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு மாற வேண்டும் என்று அந்நாட்டின் பொதுமக்கள் பிரதிநிதிக் குழு பரிந்துரைத்துள்ளது.

இலங்கை அரசமைப்புச் சட்டச் சீர்திருத்தங்கள் தொடர்பான அக்குழுவின் பரிந்துரை அறிக்கை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அறிக்கையின் சாராம்சங்களாவன: பல சமூகத்தினர், மதத்தினர் இணைந்து வாழும் இலங்கையின் பன்முகத் தன்மையைப் பாதுகாப்பதே அரசின் தலையாயப் பணி என்று இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், நாட்டின் சிறுபான்மையினராக உள்ள சமூக மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு துணை அதிபர் என்ற பதவியை உருவாக்க வேண்டும். அவ்வாறு துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுபவர், அதிபர் சார்ந்துள்ள சமூகத்தைச் சாராதவராக இருக்க வேண்டும். அப்போதுதான், அரசின் உள்கட்டமைப்புச் சமநிலையைப் பாதுகாக்க முடியும்.

நாடாளுமன்ற மேலவையிலும் சிறுபான்மையினச் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இந்த மேலவைப் பிரதிநிதிகளின் ஒப்புதல் பெறாமல் சிறுபான்மையினர் பிரச்னை தொடர்பான நடவடிக்கைகளை தன்னிச்சையாக அறிவிக்கக் கூடாது.

முக்கியமாக, இலங்கையில் தற்போது இருக்கும் அதிபர் ஆட்சி முறைக்கு (அதிபரிடமே அனைத்து அதிகாரங்களும்) பதிலாக மக்கள் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு மாற வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.